×

கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும் சரிவு: விறுவிறுப்பான விற்பனை

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த தினம் இல்லாததால், இன்று அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகளின் வருகை அதிகரிப்பால் விறுவிறுப்பான விற்பனை நடைபெற்றது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் வரத்து குறைவு காரணமாக, அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ மல்லி ₹600க்கும், ஐஸ் மல்லி ₹500க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ₹400க்கும், சாமந்தி ₹260க்கும், சம்பங்கி ₹150க்கும், பன்னீர் ரோஸ் ₹160க்கும், சாக்லெட் ரோஸ் ₹180க்கும், அதிகபட்சமாக கனகாம்பரம் ₹700க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த தினம் இல்லாததால், இன்று காலை முதல் அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மல்லி ₹300க்கும், ஐஸ் மல்லி ₹200க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ₹250க்கும், கனகாம்பரம் ₹500க்கும், சாமந்தி ₹240க்கும், சம்பங்கி ₹60க்கும், பன்னீர் ரோஸ் ₹80, சாக்லெட் ரோஸ் ₹100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில்லறை வியாபாரிகள் மற்றும் ஏராளமான இல்லத்தரசிகள் பூக்களை வாங்குவதற்கு குவிந்து வருவதால், அங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், சென்னை நகரில் இன்று விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த தினம் இல்லாததால், கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் அனைத்து வியாபாரிகளும் குறைந்த விலையில் பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதி சில்லறை வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் அதிகளவில் வந்து, ஏராளமான பூக்களை வாங்கி செல்வதால் விற்பனை பரபரப்பாக நடைபெற்று வருகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும் சரிவு: விறுவிறுப்பான விற்பனை appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Mugurtha Day ,Koyambedu market ,Chennai ,
× RELATED வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த...